பாதாமை பயன்படுத்தி எளிய முறையில் கரும்புள்ளிகள் நீங்க குறிப்பு

 பாதாம்பருப்பு

 


நாம் அதிகமாக நமது அழகை பராமரிக்க பாதாம் எண்ணெய்யை பயன்படுத்துவோம்.

 
ஆனால் இதில் பாதாம்பருப்பை பயன்படுத்தி எப்படி பிரகாசமான முகத்தை பெறலாம் என்பதை பார்ப்போம். இதை செய்வது மிகவும் சுலபம், இப்போது அது எப்படி என்று பார்ப்போம்.

 
ஒரேயொரு பாதாம் பருப்பை எடுத்து அதை உங்கள் வீட்டில் மஞ்சள் உரைக்கும் கல் அல்லது மிளகு சீரகம் இடிக்கும் இடி கல்லின் பின்புறம் சிறிது தண்ணீர் விட்டு பாதாம்பருப்பை மஞ்சள் உரைப்பது போல் உரைத்தால் பால் போன்ற ஒரு பேஸ்டாக வரும். அதை உங்கள் முகத்தில் பூசி நன்றாக காய்ந்தவுடன் கழுவி விடுங்கள். இப்படி தினமும் செய்தால் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்கி பொலிவான முகத்தை பெறலாம், நிறமும் நிச்சயமாக கூடும். ஒரு பாதாம்பருப்பே போதும் பற்றவில்லையென்றால் இன்னொன்று பயன்படுத்தி கொள்ளலாம். 

 
இதை வறண்ட சருமம், எண்ணெய் சருமம் என யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், கண்டிப்பாக ஒரு நல்ல பலனை பெறுவீர்கள்.

Comments