Posts

Showing posts with the label சமையல்_குறிப்பு

சுலபமான மற்றும் சத்தான கேழ்வரகு தோசை - Ragi Dosa

Image
இன்றைய வாழ்க்கை முறையில் சத்தான ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. எனினும் சில உணவுகள் நாம் எளிதாக வீட்டிலேயே சில மணி நேரங்களில் செய்து விடலாம். இன்று கேழ்வரகு தோசை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம். தேவையான பொருட்கள் 1.கேழ்வரகு மாவு ஒரு கப் 2.அரிசிமாவு அரை கப் 3.ரவை அரை கப் 4.கொத்தமல்லி தழை 5.கறிவேப்பிலை 6.பெரியவெங்காயம் ஒன்று 7.பச்சைமிளகாய் இரண்டு 8.பெருங்காயதூள் 9.உப்பு செய்முறை: ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை ஆகிய மூன்றையும் போட்டு, அதனுடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை ஆகியவற்றை பொடியாக நறுக்கிய சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து ரவை தோசை பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனை பத்து நிமிடம் கழித்து தோசை கல்லை சூடாக்கி ரவை தோசை ஊற்றுவது போல் ஊற்றவும், அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி மொறுமொறு என்று  எடுக்கவும் இப்போது மிகவும் சுவையான சத்தான கேழ்வரகு தோசை தயார்.

மிக சுலபமாக தூதுவளை ரசம் ரெசிப்பி செய்வது எப்படி?

Image
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சினை சளி தொந்தரவு. அதை வீட்டில் உள்ள, மிகவும் எளிமையாக கிடைக்கும் தூதுவளை கொண்டு மிகவும் சுலபமான ரசம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். ஒரு கைப்பிடி அளவு தூதுவளை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தூதுவளை நன்றாக வெந்ததும் இறக்கி சிறிது ஆறியதும் தூதுவளையை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தூதுவளை வேக வைத்த தண்ணீரில் ஒரு பெரிய தக்காளி, தட்டிய மிளகு, சீரகம், பூண்டு. சிறிது புளி கரைசல், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த‌ தூதுவளை ஆகியவற்றை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கரைத்து ரசத்தையும் ஊற்றி மிதமான தீயில் நுரை பொங்கி வரும் வேளையில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தூதுவளை ரசம் தயார். இதை ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு சத்தான சிவப்பு அரிசி கஞ்சி செய்து எப்படி?

Image
குழந்தைகள் பிறந்து ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் நன்கு தெரியும், அது வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு தான் பிரச்சினை தொடங்குகிறது குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம், எவ்வாறு கொடுக்கனும் இப்படி பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். முதலில் குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற ஆகாரத்தை ‌கொடுக்க வேண்டும், பிறகு மாதங்கள் கூடக்கூட திட உணவுகளை தர வேண்டும். அப்படி தண்ணீர் ஆகாரத்தில் ஒரு ஆரோக்கியமான கஞ்சி வகையை இதில் பார்ப்போம். இதை செய்து மிகவும் சுலபமானது எவ்வாறு என்று பார்ப்போம்.   அதற்கு சிவப்பு அரிசி என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி, அதில் இரண்டு கப் அளவிற்கு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி கொள்ளவும் பிறகு  தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் வீட்டிற்குள்ளேயே காயவிடவும் பிறகு சிறிது காய்ந்த உடன் அதை வாணலியில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும் இறக்கும் நேரத்தில் அதனுடன் அரை கப் பொட்டுக்கடலை, இரண்டு டேபிள்ஸ்பூன் ஓமம் இரண்டையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி விடவும். நன்றாக ஆறியவுடன் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அ...

கொத்தமல்லி தழை, புதினா வைத்து சுலபமான துவையல்

Image
கொத்தமல்லித்தழை, புதினா இரண்டிலுமே நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. சில நேரத்தில் நாம் அதிகமாக கொத்தமல்லி, புதினா வாங்கி விடுவோம் அதை வீண்ணடிக்காமல்‌ எளிமையான, ஆரோக்கியமான துவையலாக மாற்றலாம். இதை நாம் தோசை, இட்லி மற்றும் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். அதற்கு ஒரு கட்டு கொத்தமல்லி, ஒரு கட்டு புதினா மற்றும் ஐந்து கொத்து கறிவேப்பிலை மூன்றையும் ஆய்ந்து சுத்தமாக கழுவி கொள்ளவும்.பிறகு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி (எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்) நல்லெண்ணெய் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். பிறகு அதில் பத்து பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய் (காரத்திற்கு ஏற்றார்போல) கொட்டாபாக்கு அளவு புளி மூன்றையும் சேர்த்து அதனுடன் ஆய்ந்து வைத்து தழைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும். பிறகு ஆறியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும், பிறகு வாணலியில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொறிந்தவுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து  அரைத்த விழுதையும் சேர்த்து...