குழந்தைகளுக்கு சத்தான சிவப்பு அரிசி கஞ்சி செய்து எப்படி?
குழந்தைகள் பிறந்து ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் நன்கு தெரியும், அது வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு தான் பிரச்சினை தொடங்குகிறது குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம், எவ்வாறு கொடுக்கனும் இப்படி பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். முதலில் குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற ஆகாரத்தை கொடுக்க வேண்டும், பிறகு மாதங்கள் கூடக்கூட திட உணவுகளை தர வேண்டும். அப்படி தண்ணீர் ஆகாரத்தில் ஒரு ஆரோக்கியமான கஞ்சி வகையை இதில் பார்ப்போம். இதை செய்து மிகவும் சுலபமானது எவ்வாறு என்று பார்ப்போம்.
அதற்கு சிவப்பு அரிசி என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி, அதில் இரண்டு கப் அளவிற்கு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி கொள்ளவும் பிறகு தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் வீட்டிற்குள்ளேயே காயவிடவும் பிறகு சிறிது காய்ந்த உடன் அதை வாணலியில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும் இறக்கும் நேரத்தில் அதனுடன் அரை கப் பொட்டுக்கடலை, இரண்டு டேபிள்ஸ்பூன் ஓமம் இரண்டையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி விடவும். நன்றாக ஆறியவுடன் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும் (ரவை பதத்தில் இருந்தாலும் பரவாயில்லை) இதை ஒரு பாட்டில் போட்டு நன்றாக மூடி வைத்து கொள்ளவும். இதில் ஒரு டேபிள்ஸ்பூன் மாவை எடுத்து அதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் தேவையான அளவு உப்பு சேர்த்து கஞ்சி பதம் வரும் வரை கிளறவும் (குறைந்த பட்சம் இரண்டு நிமிடமே ஆகும்).
இந்த சிவப்பு அரிசி கஞ்சியை 8 மாத குழந்தையிலிருந்து
காலை, இரவு என்று எப்போது வேண்டுமானாலும் செய்து கொடுக்கலாம். மிகவும்
ஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்த, ஒரு சுலபமான கஞ்சி வகை ஆகும்.
sigappu arisi kanji is good for kids and children's
ReplyDeleteசிவப்பு அரிசி கஞ்சி ஓர் அற்புதமான உணவு குழந்தைகளுக்கு
ReplyDelete