Posts

Showing posts with the label குழந்தை_வளர்ப்பு

தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

Image
குழந்தை பிறந்தவுடன் அதற்கு கிடைக்கும் முதல் உணவே தாய்ப்பால் தான். முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதுவே அந்த குழந்தையின் ஆரோக்கியமான அஸ்திவாரம். ஒரு குழந்தை நன்றாக சிறுநீர், மலம் போனாலே அதற்கு போதுமான அளவிற்கு தாய்ப்பால் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்படி பால் பற்றவில்லை என்றால் தாய் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். முதலில் பாலுட்டும் தாய் மனஅழுத்தம் இன்றி இருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த தாய் எவ்வளவு ஆரோக்கியமான உணவையே சாப்பிட்டாலும் நிச்சயமாக பால் ஊறாது. முதல் உணவாக நிறைய தண்ணீரை அருந்த வேண்டும். ஆரோக்கியமான காய்கறிகள், ‌பழங்கள், அவித்து பயிறு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி பொறியியலை விட காய்கறி சூப் மிகவும் நன்றாக‌ பால் ஊறும். நிறைய கீரை வகைகளை குறிப்பாக முருங்கை கீரை நல்ல பலனை தரும். இறைச்சியில் மீன் வகைகள் குறிப்பாக பால் ‌சுறா வவ்வால் மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, முட்டை போன்றவையும் சாப்பிடலாம். பூண்டு பால், சிவப்பு அவல் இது போன்ற உணவுகள் நல்ல பலனை தரும். தாய்ப்பால் சு...

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பொம்மை தேர்ந்தெடுப்பது எப்படி?

Image
குழந்தைகளின் முதல் தோழனே பொம்மைகள் தான்.அப்படி அவர்கள் விரும்பும் பொம்மைகளை எப்படி தேர்ந்தெடுப்பது, எந்த வயதிற்கு எந்த பொம்மைகள் வாங்குவது என்று பார்ப்போம்.   குழந்தைகள் பிறந்து உடன் அவர்களால் பொருட்களை பார்த்து அறிந்து கொள்வது என்பது முடியாது.அதனால் அவர்களுக்கு ஒலி எழுப்ப கூடிய கிலுகிலுப்பை போன்ற பொருட்கள்‌ வாங்கலாம்.இப்பொழுது எல்லாம் கடைகளில் மரத்தினால் ஆன கிலுகிலுப்பைகல் அதிகமாக கிடைக்கிறது.அவைகளை வாங்கி கொடுக்கலாம்.அப்படி வாங்கும் போது குழந்தைகளை கிழிக்காதவாறு,அதிக ஒலி எழுப்பாதாவாறு பார்த்து வாங்க வேண்டும். மூன்று மாதங்கள் ஆனவுடன் அவர்களுக்கு கையில் பிடித்து கொள்ள கூடிய வண்ணமயமான, பாதுகாப்பான பொருட்களை வாங்கலாம். கீ கொடுத்தால் ஓடக்கூடிய பொம்மைகளை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். அப்படி பொம்மைகள் வாங்கும் முக்கியமான சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.விழுங்க கூடிய தன்மையில் உள்ள பொருட்களை ஒரு போதும் குழந்தைகளிடம் கொடுக்காதிர்கள்.பொம்மையில் ஆணி மாதிரி ‌ஏதேனும் கூரான பொருள் உள்ளதா, குழந்தைகள் கடித்தால் வாயோடு ஒட்டி கொள்ளும் ரப்பர் போன்ற பொருட்களை தவிர்க்கவ...

குழந்தைகளுக்கு சத்தான சம்பா ரவை, ஆப்பிள் கஞ்சி செய்வது எப்படி?

Image
ஒவ்வொரு தாயும் ஆரோக்கியமான உணவையே தனது குழந்தைக்கு  கொடுக்க நினைப்பார். அவ்வாறு இருக்கும் போது எதை கொடுப்பது, என்ன கொடுப்பது என்று தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காவே இந்த எளிமையான ஆரோக்கியமான கஞ்சி பற்றிய குறிப்பு. இதை‌  மிக சுலபமாக செய்யலாம்.‌ இதை ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். இதை‌ எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.     தேவையான பொருட்கள்: 1.சம்பா ரவை இரண்டு டேபிள்ஸ்பூன்.  2.தோல் நீக்கி துருவிய ஆப்பிள் அரை கப்.   செய்முறை :           இந்த கஞ்சி செய்ய இரண்டு டேபிள்ஸ்பூன் சம்பா ரவையை  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்ததும் அதில் துருவிய ஆப்பிளை ‌போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடுங்கள். இதற்கு உப்பு, இனிப்பு என்று எதுவும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் ஆப்பிளில் இனிப்பு சுவை இருப்பதால் கஞ்சி இனிப்பாக சுவையாக இருக்கும். மிகவும் சுலபமான, ஆரோக்கியமான கஞ்சி ரெடி.

குழந்தைகள் உணவில் கவனிக்க வேண்டியவை!

Image
ஒவ்வொரு அம்மாக்களுக்கும் தெரியும் குழந்தைகளை வளர்ப்பது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்று அவர்களது உணவு, உடை, கல்வி என்று எல்லா விசயங்களும் மிக சாவலாக இருக்கும். அதில் உணவில் தான் ‌நிறைய பிரச்சனைகளை ஒரு தாய் சந்திக்கிறார்.அதை எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம்.   உணவு: உணவை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் இருந்தே அவர்களை ஆரோக்கியமான உணவிற்கு பழக்கபடுத்துங்கள். வீட்டில் வயதானவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை குழந்தைகளை எல்லா உணவையும் சாப்பிட பழக்கபடுத்துங்கள் என்று அதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு அதிகமாக வெளியில் கிடைக்க கூடிய ஆரோக்கியம் இல்ல உணவுகளையும், எண்ணெய் பலகாரங்களையும், பாக்கெட்டில் அடைத்து உணவுகளையும் கொடுக்கிறார்கள் அது மிகவும் தவறானது. வயதானவர்கள் சொன்னது எல்லா காய்கறிகளையும், பழங்களையும், நமது வீட்டில் சமைத்து எல்லா உணவுகளையும்  சாப்பிட பழக்கபடுத்துங்கள்‌ என்று தான் கூறினார்கள். ஆனால் இப்போது உள்ள இந்த நவீன யுகத்தில் இவ்வாறு குழந்தைகளை பழக்கபடுத்துவது என்பது ரொம்பவும் கடினமானது. வெளியில் கிடைக்க கூடிய உணவுகளை தவிர்க்கவும் முடியா...

பிறந்த குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலி(கோலிக் பெயின்)

Image
குழந்தை பிறந்தவுடன் ஒரு தாய் பல பிரச்சனைகளை சந்திக்கிறார், அதை எவ்வாறு தீர்ப்பது எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.   அதில் ஒரு பிரச்சினை தான் இந்த வயிற்று வலி, சில குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பார்கள் , அதிலும் பால் குடித்தாலும் அழுதுகொண்டே இருப்பார்கள், சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் விடாமல் அழுதுகொண்டே இருப்பவர்கள். இதற்கு பெயர் தான் வயிற்று வலி (கோலிக் பெயின்), மூன்று மாதங்கள் வரை இந்த வலி நீடிக்கும்.அதுவும் குறிப்பாக பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த வயிற்று வலி அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் பால் குடிக்கும் போது காற்றையும் சேர்த்து குடித்து விடுவார்கள். அதற்காக தாய்மார்கள் பயப்படவேண்டாம். குழந்தை அழும் போது குழந்தையை உங்கள் இரு தொடையிலும் குழந்தையின் வயிற்று பகுதி தொடையில் அழுத்தியவாறு குப்புற படுக்க வைத்து கொண்டால் குழந்தை அழுவது சற்று குறையும். உங்கள் குழந்தை மருத்துவரை அணுகினால் அதற்கான மருந்தை தருவார். இதை சாதரணமாக கடந்து சென்று விடலாம். குறிப்பாக இளம் தாய்மார்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதானால்...

குழந்தைகளுக்கு சத்தான சிவப்பு அரிசி கஞ்சி செய்து எப்படி?

Image
குழந்தைகள் பிறந்து ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது நாம் அனைவரும் நன்கு தெரியும், அது வரை நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு தான் பிரச்சினை தொடங்குகிறது குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம், எவ்வாறு கொடுக்கனும் இப்படி பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். முதலில் குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற ஆகாரத்தை ‌கொடுக்க வேண்டும், பிறகு மாதங்கள் கூடக்கூட திட உணவுகளை தர வேண்டும். அப்படி தண்ணீர் ஆகாரத்தில் ஒரு ஆரோக்கியமான கஞ்சி வகையை இதில் பார்ப்போம். இதை செய்து மிகவும் சுலபமானது எவ்வாறு என்று பார்ப்போம்.   அதற்கு சிவப்பு அரிசி என்று கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி, அதில் இரண்டு கப் அளவிற்கு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அலசி கொள்ளவும் பிறகு  தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் வீட்டிற்குள்ளேயே காயவிடவும் பிறகு சிறிது காய்ந்த உடன் அதை வாணலியில் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும் இறக்கும் நேரத்தில் அதனுடன் அரை கப் பொட்டுக்கடலை, இரண்டு டேபிள்ஸ்பூன் ஓமம் இரண்டையும் சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி விடவும். நன்றாக ஆறியவுடன் அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அ...