குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு பொம்மை தேர்ந்தெடுப்பது எப்படி?
குழந்தைகளின் முதல் தோழனே பொம்மைகள்
தான்.அப்படி அவர்கள் விரும்பும் பொம்மைகளை எப்படி தேர்ந்தெடுப்பது, எந்த
வயதிற்கு எந்த பொம்மைகள் வாங்குவது என்று பார்ப்போம்.
குழந்தைகள் பிறந்து உடன் அவர்களால் பொருட்களை பார்த்து அறிந்து கொள்வது என்பது முடியாது.அதனால் அவர்களுக்கு ஒலி எழுப்ப கூடிய கிலுகிலுப்பை போன்ற பொருட்கள் வாங்கலாம்.இப்பொழுது எல்லாம் கடைகளில் மரத்தினால் ஆன கிலுகிலுப்பைகல் அதிகமாக கிடைக்கிறது.அவைகளை வாங்கி கொடுக்கலாம்.அப்படி வாங்கும் போது குழந்தைகளை கிழிக்காதவாறு,அதிக ஒலி எழுப்பாதாவாறு பார்த்து வாங்க வேண்டும். மூன்று மாதங்கள் ஆனவுடன் அவர்களுக்கு கையில் பிடித்து கொள்ள கூடிய வண்ணமயமான, பாதுகாப்பான பொருட்களை வாங்கலாம். கீ கொடுத்தால் ஓடக்கூடிய பொம்மைகளை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். அப்படி பொம்மைகள் வாங்கும் முக்கியமான சில விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.விழுங்க கூடிய தன்மையில் உள்ள பொருட்களை ஒரு போதும் குழந்தைகளிடம் கொடுக்காதிர்கள்.பொம்மையில் ஆணி மாதிரி ஏதேனும் கூரான பொருள் உள்ளதா, குழந்தைகள் கடித்தால் வாயோடு ஒட்டி கொள்ளும் ரப்பர் போன்ற பொருட்களை தவிர்க்கவும். எட்டு மாதங்களுக்கு மேல் அவர்கள் அடுக்க கூடிய, சேர்க்க கூடிய பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.அவர்கள் நிற்க பழகும் நேரங்களில் நடவண்டி வாங்கி கொடுக்கலாம்.
கண்டிப்பாக வாக்கர் வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும். அதில் அவர்களால் நேராக நடக்க முடியாது முட்டி பகுதி மடங்கியவாறு தான் நடப்பார்கள். ஒரு வயதிற்கு மேல் அவர்கள் ஓட்ட கூடிய மூன்று சக்கரம் உடைய சைக்கிள் வாங்கி கொடுக்கலாம்.வண்ணங்கள், பழங்கள், காய்கள், விலங்குகள் உள்ள வண்ணமயமான புத்தகங்களையும், தொட்டு உணர கூடிய புத்தகங்களையும் வாங்கி தரலாம். ஒவ்வொரு குழந்தையும் வளரவளர அவர்கள் எது மீது ஆர்வம் கொள்கிறார்கள் என்று ஒவ்வொரு அம்மாக்களுக்கும் தெரியும் அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பொம்மைகளை தேர்ந்தெடுக்கலாம்.நீங்கள் வாங்கி கொடுக்கும் பொம்மைகள் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டாம். ஏனேன்றால் குழந்தைகள் சீக்கிரமாகவே பொம்மைகளை உடைத்து விடுவார்கள். மிகவும் விலை குறைவாகவும் வேண்டாம் அது தரமற்றதாக இருக்கும். நடுநிலையான விலையில் வாங்கவும்.
Comments
Post a Comment