பிறந்த குழந்தைகளுக்கு வரும் வயிற்று வலி(கோலிக் பெயின்)
குழந்தை பிறந்தவுடன் ஒரு தாய் பல பிரச்சனைகளை சந்திக்கிறார், அதை எவ்வாறு தீர்ப்பது எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
அதில் ஒரு பிரச்சினை தான் இந்த வயிற்று வலி, சில குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பார்கள் , அதிலும் பால் குடித்தாலும் அழுதுகொண்டே இருப்பார்கள், சிலர் மாலை ஆறு மணிக்கு மேல் விடாமல் அழுதுகொண்டே இருப்பவர்கள். இதற்கு பெயர் தான் வயிற்று வலி (கோலிக் பெயின்), மூன்று மாதங்கள் வரை இந்த வலி நீடிக்கும்.அதுவும் குறிப்பாக பவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த வயிற்று வலி அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் பால் குடிக்கும் போது காற்றையும் சேர்த்து குடித்து விடுவார்கள். அதற்காக தாய்மார்கள் பயப்படவேண்டாம்.
குழந்தை அழும் போது குழந்தையை உங்கள் இரு தொடையிலும் குழந்தையின் வயிற்று பகுதி தொடையில் அழுத்தியவாறு குப்புற படுக்க வைத்து கொண்டால் குழந்தை அழுவது சற்று குறையும். உங்கள் குழந்தை மருத்துவரை அணுகினால் அதற்கான மருந்தை தருவார். இதை சாதரணமாக கடந்து சென்று விடலாம். குறிப்பாக இளம் தாய்மார்களுக்கு இது ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதானால் அவர்கள் அஞ்சாமல் தைரியமாக கடந்து செல்லுங்கள்
Comments
Post a Comment