குழந்தைகளுக்கு சத்தான சம்பா ரவை, ஆப்பிள் கஞ்சி செய்வது எப்படி?

ஒவ்வொரு தாயும் ஆரோக்கியமான உணவையே தனது குழந்தைக்கு  கொடுக்க நினைப்பார். அவ்வாறு இருக்கும் போது எதை கொடுப்பது, என்ன கொடுப்பது என்று தெரியாமல் தவிப்பார்கள். அவர்களுக்காவே இந்த எளிமையான ஆரோக்கியமான கஞ்சி பற்றிய குறிப்பு. இதை‌  மிக சுலபமாக செய்யலாம்.‌ இதை ஒரு வயது மேல் உள்ள குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம். இதை‌ எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.

  

தேவையான பொருட்கள்:


1.சம்பா ரவை இரண்டு டேபிள்ஸ்பூன்.

 2.தோல் நீக்கி துருவிய ஆப்பிள் அரை கப். 

செய்முறை:          

இந்த கஞ்சி செய்ய இரண்டு டேபிள்ஸ்பூன் சம்பா ரவையை  அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்ததும் அதில் துருவிய ஆப்பிளை ‌போட்டு ஒரு நிமிடம் கொதிக்க விடுங்கள். இதற்கு உப்பு, இனிப்பு என்று எதுவும் சேர்க்க வேண்டாம், ஏனெனில் ஆப்பிளில் இனிப்பு சுவை இருப்பதால் கஞ்சி இனிப்பாக சுவையாக இருக்கும். மிகவும் சுலபமான, ஆரோக்கியமான கஞ்சி ரெடி.

Comments