இரும்புச்சத்து அளவை உடலில் அதிகரிக்க எளிய 8 வழிகள்!
இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சினை இரும்புச்சத்து குறைபாடு நோய்.இந்த இரும்புச்சத்து குறைபாட்டை எந்த உணவுகளால் தவிர்க்கலாம் என்று பார்ப்போம். பழங்கள்: பழங்களில் மாதுளம்பழம், கொய்யா, அத்திப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவைகளில் இரும்புச்சத்து நிறைந்த உள்ளது. காய்கறிகள் : பீட்ரூட், கத்தரிக்காய் வாழைக்காய், காலிபிளவர், புரோக்கோலி, பீர்க்கங்காய் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரைகள் : அனைத்து வகையான கீரைகளிலிலும் இரும்புச்சத்து நிறைந்த உள்ளது. குறிப்பாக முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது . உலர் பழங்கள்: உலர் பழங்களில் அத்திப்பழம், உலர் திராட்சை, பாதாம், அக்ரூட், ஆப்ரிகாட், பேரீச்சை போன்றவை அடங்கும். இறைச்சி வகைகள்: முட்டை, ஈரல், மீன் வகைகள், நாட்டுக்கோழி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உலர் தானியங்கள்: எள், வேர்க்கடலை, சோயா, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், பூசணி விதைகள், சிவப்பு அரிசி, கேழ்வரகு , முளைகட்டிய தானியங்கள் போன்றவை ஆகும். இரும்பு பாத்திரங்கள் : முடிந்தவரை சமையலுக்கு பயன்படுத்து...