இரும்புச்சத்து அளவை உடலில் அதிகரிக்க எளிய 8 வழிகள்!

இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சினை இரும்புச்சத்து குறைபாடு நோய்.இந்த இரும்புச்சத்து குறைபாட்டை எந்த உணவுகளால் தவிர்க்கலாம் என்று பார்ப்போம்.

பழங்கள்:

பழங்களில் மாதுளம்பழம், கொய்யா, அத்திப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவைகளில் இரும்புச்சத்து நிறைந்த உள்ளது.

காய்கறிகள்:

பீட்ரூட், கத்தரிக்காய் வாழைக்காய், காலிபிளவர், புரோக்கோலி, பீர்க்கங்காய் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

கீரைகள்:

அனைத்து வகையான கீரைகளிலிலும் இரும்புச்சத்து நிறைந்த உள்ளது. குறிப்பாக முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது

உலர் பழங்கள்:

உலர் பழங்களில் அத்திப்பழம், உலர் திராட்சை, பாதாம், அக்ரூட், ஆப்ரிகாட், பேரீச்சை போன்றவை அடங்கும்.

இறைச்சி வகைகள்:

முட்டை, ஈரல், மீன் வகைகள், நாட்டுக்கோழி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

உலர் தானியங்கள்:

எள், வேர்க்கடலை, சோயா, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், பூசணி விதைகள், சிவப்பு அரிசி, கேழ்வரகு , முளைகட்டிய தானியங்கள் போன்றவை ஆகும்.

இரும்பு பாத்திரங்கள்:

முடிந்தவரை சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்கள் இரும்பு பாத்திரமாக இருந்தால் மிகவும் நல்லது. குறிப்பாக தோசை கல், வடைச்சட்டி ஆகியவை இரும்பில் பயன்படுத்துங்கள்.

சூரிய ஒளி:

முடிந்த வரை சூரிய ஒளியில் குறைந்த பத்து நிமிடமாவது நில்லுங்கள். குறிப்பாக குழந்தைகளை கண்டிப்பாக சூரிய ஒளியில் நிற்க வைக்க வேண்டும்.சூரிய ஒளியில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

Comments