Posts

Showing posts with the label மருத்துவ_குறிப்பு

தேனில் ஊற வைத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Image
மருத்துவ உலகில் நமக்கு கிடைத்த மகத்துவமான பொருட்கள் பூண்டு மற்றும் தேன். இந்த பூண்டு மற்றும் தேனை நாம் தனித்தனியாக சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். பூண்டை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான பலனை பெறுவீர்கள். அது எப்படி, என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம். தேனில் ஊற வைத்து பூண்டு செய்யும் முறை: முதலில் உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து விடுங்கள். பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பூண்டு முழுகும் அளவிற்கு சுத்தமான தேனை ஊற்றி கொள்ளவும். பிறகு நன்றாக காற்றுப்புகாமல் மூடி வைக்கவும், தினமும் அதை ஒரு மேஜைக்கரண்டி கொண்டு கிளறிவிடவும். பூண்டின் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறத்திற்கு வரும் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்கும் முன் இரண்டு பல் பூண்டை தேனுடன் சேர்த்து சாப்பிடுங்கள். கிடைக்கும் நன்மைகள் இந்த தேனில் ஊற வைத்து பூண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. மாரடைப்பைத் தடுக்கும், சளி இருமல் குணமாகும். தேகத்திற்கு பலம் தரும், வயிற்று சார்ந்த அனைத்து பிரச்சன...

இரும்புச்சத்து அளவை உடலில் அதிகரிக்க எளிய 8 வழிகள்!

Image
இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக பெண்கள் சந்திக்கும் மிக பெரிய பிரச்சினை இரும்புச்சத்து குறைபாடு நோய்.இந்த இரும்புச்சத்து குறைபாட்டை எந்த உணவுகளால் தவிர்க்கலாம் என்று பார்ப்போம். பழங்கள்: பழங்களில் மாதுளம்பழம், கொய்யா, அத்திப்பழம், மாம்பழம், தர்பூசணி ஆகியவைகளில் இரும்புச்சத்து நிறைந்த உள்ளது. காய்கறிகள் : பீட்ரூட், கத்தரிக்காய் வாழைக்காய், காலிபிளவர், புரோக்கோலி, பீர்க்கங்காய் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கீரைகள் : அனைத்து வகையான கீரைகளிலிலும் இரும்புச்சத்து நிறைந்த உள்ளது. குறிப்பாக முருங்கைக்கீரை முக்கிய பங்கு வகிக்கிறது .  உலர் பழங்கள்: உலர் பழங்களில் அத்திப்பழம், உலர் திராட்சை, பாதாம், அக்ரூட், ஆப்ரிகாட், பேரீச்சை போன்றவை அடங்கும். இறைச்சி வகைகள்: முட்டை, ஈரல், மீன் வகைகள், நாட்டுக்கோழி போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. உலர் தானியங்கள்: எள், வேர்க்கடலை, சோயா, கொண்டைக்கடலை, கிட்னி பீன்ஸ், பூசணி விதைகள், சிவப்பு அரிசி, கேழ்வரகு , முளைகட்டிய தானியங்கள் போன்றவை ஆகும். இரும்பு பாத்திரங்கள் : முடிந்தவரை சமையலுக்கு பயன்படுத்து...

சளி பிரச்சினை தீர்க்க எளிய வீட்டு வைத்தியம்

Image
பனிக்காலம், மழைக்காலம் என்று எப்போதும் நம்மளை துரத்தும் ஒரே நோய் இந்த சளித்தொல்லை தான். அதை எவ்வாறு வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யலாம் என்பதே பார்ப்போம். இதை மிகவும் எளிமையாக செய்யலாம். அதற்கு‌ ஒரு வெற்றிலையை எடுத்து அதை காம்பு நீக்கி சுத்தம் செய்து விடுங்கள் அதனுடன் ஒரு ஓமவல்லி இலை, ஐந்து ஆறு துளசி இலை, ஐந்து மிளகு, ஒரேயொரு கிராம்பு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை வைத்து அதனுடன் காரம் தெரியாமல் இருக்க சிறிது நாட்டுச் சக்கரை அல்லது கடலை மிட்டாய் வைத்து  அதை மெதுவாக மென்று கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு காலை,மாலை இரு வேளையும் மூன்று நாட்கள் செய்தால் நிச்சயமாக நல்ல பலனை பெறுவீர்கள். இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதில் பாதி அளவு எடுத்து இடிகல்லில் இடித்து அதன் சாற்றை மட்டும் கொடுக்கலாம்.