சளி பிரச்சினை தீர்க்க எளிய வீட்டு வைத்தியம்
பனிக்காலம், மழைக்காலம் என்று எப்போதும் நம்மளை துரத்தும் ஒரே நோய் இந்த சளித்தொல்லை தான்.
அதை எவ்வாறு வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யலாம் என்பதே பார்ப்போம். இதை மிகவும் எளிமையாக செய்யலாம். அதற்கு ஒரு வெற்றிலையை எடுத்து அதை காம்பு நீக்கி சுத்தம் செய்து விடுங்கள் அதனுடன் ஒரு ஓமவல்லி இலை, ஐந்து ஆறு துளசி இலை, ஐந்து மிளகு, ஒரேயொரு கிராம்பு, ஒரு ஏலக்காய் ஆகியவற்றை வைத்து அதனுடன் காரம் தெரியாமல் இருக்க சிறிது நாட்டுச் சக்கரை அல்லது கடலை மிட்டாய் வைத்து அதை மெதுவாக மென்று கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு காலை,மாலை இரு வேளையும் மூன்று நாட்கள் செய்தால் நிச்சயமாக நல்ல பலனை பெறுவீர்கள். இரண்டு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இதில் பாதி அளவு எடுத்து இடிகல்லில் இடித்து அதன் சாற்றை மட்டும் கொடுக்கலாம்.
Comments
Post a Comment