தேனில் ஊற வைத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மருத்துவ உலகில் நமக்கு கிடைத்த மகத்துவமான பொருட்கள் பூண்டு மற்றும் தேன். இந்த பூண்டு மற்றும் தேனை நாம் தனித்தனியாக சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும். பூண்டை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமான பலனை பெறுவீர்கள். அது எப்படி, என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

தேனில் ஊற வைத்து பூண்டு செய்யும் முறை:

முதலில் உங்களுக்கு தேவையான அளவு பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து விடுங்கள். பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பூண்டு முழுகும் அளவிற்கு சுத்தமான தேனை ஊற்றி கொள்ளவும். பிறகு நன்றாக காற்றுப்புகாமல் மூடி வைக்கவும், தினமும் அதை ஒரு மேஜைக்கரண்டி கொண்டு கிளறிவிடவும். பூண்டின் வெண்மை நிறம் மாறி மஞ்சள் நிறத்திற்கு வரும் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு அதை வெறும் வயிற்றிலோ அல்லது இரவு தூங்கும் முன் இரண்டு பல் பூண்டை தேனுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

கிடைக்கும் நன்மைகள்

இந்த தேனில் ஊற வைத்து பூண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. மாரடைப்பைத் தடுக்கும், சளி இருமல் குணமாகும். தேகத்திற்கு பலம் தரும், வயிற்று சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்யும். இரத்தச்சோகை சரி செய்யும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும். இன்ஸுலின் சுரப்பை அதிகப்படுத்தும், அலர்ஜி, அதிகப்படியான கொழுப்பு ஆகியவற்றை குறைக்கும்.

Comments