குழந்தைகள் உணவில் கவனிக்க வேண்டியவை!
ஒவ்வொரு அம்மாக்களுக்கும் தெரியும் குழந்தைகளை வளர்ப்பது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்று அவர்களது உணவு, உடை, கல்வி என்று எல்லா விசயங்களும் மிக சாவலாக இருக்கும். அதில் உணவில் தான் நிறைய பிரச்சனைகளை ஒரு தாய் சந்திக்கிறார்.அதை எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம்.
உணவு:உணவை எடுத்துக் கொண்டால் ஆரம்பத்தில் இருந்தே அவர்களை ஆரோக்கியமான உணவிற்கு பழக்கபடுத்துங்கள். வீட்டில் வயதானவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை குழந்தைகளை எல்லா உணவையும் சாப்பிட பழக்கபடுத்துங்கள் என்று அதை நிறைய பேர் தவறாக புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு அதிகமாக வெளியில் கிடைக்க கூடிய ஆரோக்கியம் இல்ல உணவுகளையும், எண்ணெய் பலகாரங்களையும், பாக்கெட்டில் அடைத்து உணவுகளையும் கொடுக்கிறார்கள் அது மிகவும் தவறானது. வயதானவர்கள் சொன்னது எல்லா காய்கறிகளையும், பழங்களையும், நமது வீட்டில் சமைத்து எல்லா உணவுகளையும் சாப்பிட பழக்கபடுத்துங்கள் என்று தான் கூறினார்கள்.
ஆனால் இப்போது உள்ள இந்த நவீன யுகத்தில் இவ்வாறு குழந்தைகளை பழக்கபடுத்துவது என்பது ரொம்பவும் கடினமானது. வெளியில் கிடைக்க கூடிய உணவுகளை தவிர்க்கவும் முடியாது. அப்படி ஒரு சூழலில் சில தந்திரங்களை பயன்படுத்தி எப்படி உங்கள் குழந்தையை வளர்க்கலாம் என பார்ப்போம். உதாரணமாக உங்கள் குழந்தை குச்சி மிட்டாய் வேண்டும் என்று கேட்டால் தாராளமாக வாங்கி கொடுங்கள். ஆனால் அடுத்த முறை வாங்கி கொடுப்பதற்கு முன்பே உங்கள் குழந்தை ஏதேனும் ஒரு காய்கறியை சாப்பிட மறுக்கிறது உடனே நீங்கள் இந்த காய் சாப்பிட்டால் தான் குச்சி மிட்டாய் வாங்கி தருவேன் என்று சொல்லுங்கள், இந்த காய் சாப்பிட்டால் நன்றாக ஓடலாம், விளையாடலாம் என்று அவர்களுக்கு புரியும் படி கூறுங்கள். நிச்சயமாக கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்வார்கள். முடிந்த வரை அவர்களுக்கு பிடித்தமான உணவை செய்து கொடுங்கள். உதாரணமாக வெண்டைக்காய் பொரியல் செய்தால் நிச்சயம் குழந்தைகள் விரும்பாது, அதனுடன் அவர்களுக்கு பிடித்தமான உருளைக்கிழங்கு வறுவல், வற்றல் என்று எது அவர்களுக்கு பிடிக்குமோ அதையும் சேர்த்து செய்து கொடுங்கள். இப்படியே அவர்களை எல்லா உணவையும் சாப்பிட பழக்கபடுத்துங்கள். எது ஆரோக்கியமானது எது ஆரோக்கியமற்றது என்று ஆரம்பத்தில் இருந்தே அவர்களுக்கு புரிய வையுங்கள் நிச்சயமாக நாட்கள் செல்லச் செல்ல அவர்களை அதற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு வாழ பழகிவிடுவார்கள்.
Comments
Post a Comment