தாய்ப்பால் சுரக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

குழந்தை பிறந்தவுடன் அதற்கு கிடைக்கும் முதல் உணவே தாய்ப்பால் தான். முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதுவே அந்த குழந்தையின் ஆரோக்கியமான அஸ்திவாரம். ஒரு குழந்தை நன்றாக சிறுநீர், மலம் போனாலே அதற்கு போதுமான அளவிற்கு தாய்ப்பால் கிடைக்கிறது என்று அர்த்தம். அப்படி பால் பற்றவில்லை என்றால் தாய் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம்.


முதலில் பாலுட்டும் தாய் மனஅழுத்தம் இன்றி இருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த தாய் எவ்வளவு ஆரோக்கியமான உணவையே சாப்பிட்டாலும் நிச்சயமாக பால் ஊறாது. முதல் உணவாக நிறைய தண்ணீரை அருந்த வேண்டும். ஆரோக்கியமான காய்கறிகள், ‌பழங்கள், அவித்து பயிறு வகைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறி பொறியியலை விட காய்கறி சூப் மிகவும் நன்றாக‌ பால் ஊறும். நிறைய கீரை வகைகளை குறிப்பாக முருங்கை கீரை நல்ல பலனை தரும். இறைச்சியில் மீன் வகைகள் குறிப்பாக பால் ‌சுறா வவ்வால் மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி, முட்டை போன்றவையும் சாப்பிடலாம். பூண்டு பால், சிவப்பு அவல் இது போன்ற உணவுகள் நல்ல பலனை தரும்.

தாய்ப்பால் சுரப்பதற்க்கு நீங்கள் பம்பிங் மிஷின் வைத்து பம்ப் செய்தால் நன்றாக பால் ஊறும்.

**மேற்காணும் வழிமுறைகளை‌ பின்பற்றியும் உங்களுக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றால் உங்கள் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி ‌தாய்ப்பால் சுரக்க மாத்திரைகளை பயன்படுத்தலாம்**

Comments