மிக சுலபமாக தூதுவளை ரசம் ரெசிப்பி செய்வது எப்படி?
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் பிரச்சினை சளி தொந்தரவு. அதை வீட்டில் உள்ள, மிகவும் எளிமையாக கிடைக்கும் தூதுவளை கொண்டு மிகவும் சுலபமான ரசம் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
ஒரு கைப்பிடி அளவு தூதுவளை எடுத்துக் கொண்டு நன்றாக சுத்தம் செய்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தூதுவளை நன்றாக வெந்ததும் இறக்கி சிறிது ஆறியதும் தூதுவளையை மட்டும் எடுத்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தூதுவளை வேக வைத்த தண்ணீரில் ஒரு பெரிய தக்காளி, தட்டிய மிளகு, சீரகம், பூண்டு. சிறிது புளி கரைசல், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தூதுவளை ஆகியவற்றை சேர்த்து போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும். பிறகு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து கரைத்து ரசத்தையும் ஊற்றி மிதமான தீயில் நுரை பொங்கி வரும் வேளையில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான தூதுவளை ரசம் தயார். இதை ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
Comments
Post a Comment