கொத்தமல்லி தழை, புதினா வைத்து சுலபமான துவையல்
கொத்தமல்லித்தழை, புதினா இரண்டிலுமே நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன. சில நேரத்தில் நாம் அதிகமாக கொத்தமல்லி, புதினா வாங்கி விடுவோம் அதை வீண்ணடிக்காமல் எளிமையான, ஆரோக்கியமான துவையலாக மாற்றலாம். இதை நாம் தோசை, இட்லி மற்றும் சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.
அதற்கு ஒரு கட்டு கொத்தமல்லி, ஒரு கட்டு புதினா மற்றும் ஐந்து கொத்து கறிவேப்பிலை மூன்றையும் ஆய்ந்து சுத்தமாக கழுவி கொள்ளவும்.பிறகு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி (எந்த எண்ணெய் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்) நல்லெண்ணெய் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும். பிறகு அதில் பத்து பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய் (காரத்திற்கு ஏற்றார்போல) கொட்டாபாக்கு அளவு புளி மூன்றையும் சேர்த்து அதனுடன் ஆய்ந்து வைத்து தழைகளையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும். பிறகு ஆறியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும், பிறகு வாணலியில் மூன்று டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொறிந்தவுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து அதில் உள்ள தண்ணீர் சுண்டி சிறிது நிறம் மாறியவுடன் இறக்கி வைக்கவும்.இப்பொழுது மிகவும் சுவையான ஆரோக்கியமான ஒரு துவையல் ரெடி.
Comments
Post a Comment