சுலபமான மற்றும் சத்தான கேழ்வரகு தோசை - Ragi Dosa
இன்றைய வாழ்க்கை முறையில் சத்தான ஆரோக்கியம் நிறைந்த உணவுகள் என்பது எட்டாக்கனியாகிவிட்டது. எனினும் சில உணவுகள் நாம் எளிதாக வீட்டிலேயே சில மணி நேரங்களில் செய்து விடலாம். இன்று கேழ்வரகு தோசை வீட்டிலேயே எளிதாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
1.கேழ்வரகு மாவு ஒரு கப்
2.அரிசிமாவு அரை கப்
3.ரவை அரை கப்
4.கொத்தமல்லி தழை
5.கறிவேப்பிலை
6.பெரியவெங்காயம் ஒன்று
7.பச்சைமிளகாய் இரண்டு
8.பெருங்காயதூள்
9.உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, ரவை ஆகிய மூன்றையும் போட்டு, அதனுடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை ஆகியவற்றை பொடியாக நறுக்கிய சேர்த்துக் கொள்ளவும் இதனுடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் தண்ணீர் சேர்த்து ரவை தோசை பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனை பத்து நிமிடம் கழித்து தோசை கல்லை சூடாக்கி ரவை தோசை ஊற்றுவது போல் ஊற்றவும், அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி மொறுமொறு என்று எடுக்கவும் இப்போது மிகவும் சுவையான சத்தான கேழ்வரகு தோசை தயார்.
Comments
Post a Comment