பிரசவத்திற்கு பின் வரும் மன அழுத்தத்திற்கான தீர்வு (Postpartum Depression)

ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றாலே மறுபிறவி என்று சொல்வார்கள். அதில் குழந்தை பிறக்கும் நேரம் மட்டும் அல்லாமல், அதற்கு பிறகும் அவள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அடங்கும். அதில் முக்கியமான ஒன்று மனஅழுத்தம்.

குழந்தை பிறந்தவுடன் ஒரு தாயின் ‌வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடுகிறது.பிரசவத்திற்கு முன் வாழ்ந்த உலகில் இருந்து வேறு ஒரு உலகிற்கு ‌வருகிறாள்.

அதில் அவளது தூக்கம், உணவு, பொழுதுபோக்கு என்று எல்லாமே மாறிவிடுகிறது.இப்படி ஒரு நிலை வரும் போது அந்த புதிய உலகிற்கு தன்னை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாமல் மனஅழுத்தத்திற் ஆளாகிறார்கள். இதை நாம் ஆரம்பநிலையிலையை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை நாட வேண்டும். முதலாவது குழந்தை தூங்கும் போது நீங்களும் தூங்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். பிடித்த இசை கேட்கலாம், குழந்தையை சிறிது நேரம் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுத்து விட்டு வெளியே சிறிது நடைபயிற்சி ‌செய்லாம். வீட்டிற் உள்ளேயே யோகா, உடற்பயிற்சி போன்றவை செய்யலாம். உங்களுக்கு எதில் மிகவும் ஆர்வம் உண்டோ அதை நீங்கள் செய்யலாம்.

தனிமையில் இருக்காமல் எப்பொழுதும் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி சந்தோஷமாக இருங்கள். நம்மை விட மிகவும் கஷ்டத்தில் உள்ளவர்களை நினைத்தால் கடவுள் நமக்கு அருமையான வாழ்க்கை அளித்திருக்கிறார் அதை நாம் சந்தோஷமாக வாழ்வோம் என்று நினைத்தாலே மன அழுத்தம் எல்லாம் பறந்து போய்விடும்.ஒரு பெண் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கிறார், அதை போல் இதையும் நாம் தாண்டி நிச்சயமாக நம் வாழ்க்கையே நம் குடும்பத்தில் உள்ளவர்களோடு சந்தோஷமாக வாழ்வோம் என்று நம்பிக்கை வைப்போம்.

Comments