புடவைகள் மற்றும் பிளவுஸ் டிசைன் தேர்ந்தெடுக்க சில குறிப்புகள்

விதவிதமான ஆடைகள் வந்தாலும் பெண்கள் மிகவும் விரும்பி உடுத்தும் உடை புடவைகள் மட்டும்தான். அதில் அவர்கள் தனித்துவமாக நேர்த்தியாகவும் இருப்பார்கள். அப்படி புடவையை விரும்பும் பெண்களுக்கு சில குறிப்புகள்.

1.பட்டு புடைவைள்

புடவையில் முதல் இடம் பிடிப்பது பட்டுப் புடவைகள் தான், அப்படி பட்டுப்புடவை வாங்கும் போது உயரம் குறைவாக இருப்பவர்கள் சிறிய பார்டர் அல்லது பார்டர் இல்லாமல் உடல் முழுவதும் ஆங்காங்கே ஜரி வொர்க் உள்ள புடைவையை தேர்ந்தெடுத்து அணிந்தால் மிகவும் அழகாக தெரிவார்கள். உயரம் அதிகம் உள்ளவர்கள் பெரிய பார்டர் மற்றும் முழு ஜரி வொர்க் புடவை அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். 

2.காட்டன் புடைவைகள்:

உயரமான பெண்கள் சில்க் காட்டன் புடவை அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

உயரம் குறைவாக இருப்பவர்கள் சில்க் காட்டன் புடவையை தவிர்க்கவும் அது அவர்களை மேலும் உயரம் குறைவாக காட்டும். உயரம் குறைவாக இருப்பவர்கள் சாஃப்ட் காட்டன் புடவை அணிந்தால் பார்ப்பதற்கு ரிச் லுக் தரும்.

3.Georgette, chiffon  புடைவைகள்:

இந்த வகை புடைவைகளை உயரம் குறைவானவர்கள், அதிகமானவர்கள் யார் அணிந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.

4.பிளவுஸ் தேர்ந்தெடுக்கும் போது சில குறிப்புகள்:

பெரும்பாலும் புடைவையோடு ரன்னிங் பிளவுஸ் என்று இப்போது கிடைக்கிறது, புடவையை விட பிளவுஸ் தைக்கும் கூலி தான் அதிகம். பெரும்பாலும் அதை வைப்பதை தவிர்த்து விடுங்கள், அவசியம் அந்த பிளவுஸ் போட்டால் தான் அந்த புடைவைக்கு நன்றாக இருக்கும் என்கிற வேளையில் அதை தைக்கவும் இல்லையென்றால் அதை தவிர்த்து விட்டு உங்கள் புடைவைக்கு மேட்சிங்கான பிளைன் பிளவுஸ் வாங்கி அதில் டிசைன் வைத்து வைத்து கொள்ளவும். இப்படி தைத்தால் அந்த பிளவுஸ்யை‌ பல புடைவைகளுக்கு மேட்சிங் செய்து கொள்ளலாம் மிகவும் அழகாக இருக்கும். நிறைய பணத்தை மிச்சம் பிடிக்கலாம்.

Comments