பனிகால சரும பராமரிப்புக்காக எளிய இரண்டு குறிப்புகள்
பனிக்காலங்களில் நமது சருமம் மிகவும் வறண்டு
விடும் குறிப்பாக முகத்தில் திட்டுதிட்டாக வெள்ளையாக தெரியும். சிலருக்கு
முகம் கழுவியவுடன் பிடிப்பது போல இருக்கும், இதை மிக எளிதாக வீட்டில்
உள்ள இரண்டு எளிய பொருட்களை வைத்தே அருமையான பலனை பெறலாம்.
1.சோற்றுக்கற்றாழை:
சோற்றுக்கற்றாழை
சருமத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம். சோற்றுக்கற்றாழை செடியிலிருந்து ஒரு
மடலை நறுக்கி அதை 1மணி நேரம் நறுக்கிய பகுதி தண்ணீரில் இருக்கும் படி
வைத்து விடுங்கள்,அப்பொழுது அதில் உள்ள மஞ்சள்நிற திரவம்
வெளியேறிவிடும், பிறகு கற்றாழை வெளியில் எடுத்து அதில் சிறு துண்டை மட்டும்
நறுக்கி அதில் உள்ள ஜெல்லை முகத்தில் பூசி கொண்டு அரைமணி நேரத்திற்கு பிறகு
கழுவிவிடுங்கள். மீதமுள்ள கற்றாழையை காகிதத்தில் சுற்றி வெளியிலே வைத்த
கொள்ளுங்கள் நீண்ட நாட்களாக கெடாமல் இருக்கும். அதில் சிறு துண்டை எடுத்து
தினமும் உங்கள் முகத்தில் பூசி கொள்ளுங்கள்.
2. பாசிப்பயிறு மாவு:
பனிகாலத்தில் முகத்திற்கு சோப்பு போட்டால் அதுமுகத்தை மிகவும் வறட்சியாக்கும், அதை தடுக்க மிகவும் பயனுள்ளது இந்த பாசிப்பயறு மாவு.
1 கிலோ தோள் உள்ள பாசிப்பயிரை நன்றாக காய வைத்த மிஷினில் கொடுத்து நன்றாக பொடி செய்து கொள்ளவும் (வீட்டில் அரைத்தால் கரகரப்பாக கிடைக்கும் அதனால் அதை தவிர்க்கவும்) இந்த மாவை டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்திருங்கள், அதில் சிறிதளவு மாவை மட்டும் சிறிய டப்பாவில் எடுத்து உங்களுடைய குளியலறையில் வைத்த கொள்ளுங்கள்.நீங்கள் குளிக்கும் போது சிறிது மாவை எடுத்த தண்ணீரில் கலந்து முகத்தில் தடவி மெதுவாக தேய்த்து குளியுங்கள்.
இந்த இரண்டு எளிய குறிப்புகளை நீங்கள்
தினமும் செய்துவந்தால் நிச்சயமாக எண்ணெய் பிசுபிசுப்பற்ற, வறட்சியற்ற
பிரகாசமான முகத்தை பெறுவீர்கள். இரண்டு நாட்களிலேயே வித்தியாசத்தை உணர்வீர்கள்.
எந்த விதமான விலை உயர்ந்த கீரிம்களும் தேவையில்லை இதை செய்தாலே போதும் கரும்புள்ளிகள் அற்ற முகத்தை பெறலாம்.
Comments
Post a Comment