5 மாநில தேர்தலும், இந்தியாவில் கொரோனா பரவலும்! எதிர்நோக்கி உள்ள சவால்கள்!

அடுத்த மாதம் (பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில்) ஐந்து மாநிலங்களின் சட்டபேரவை பொதுத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே கொரோனா பரவல் ராக்கெட் வேகத்தில் இந்தியா முழுவதும் உயர தொடங்கி உள்ளது. இதனால் நாடு தழுவிய முழு ஊரடங்குக்கு வருமோ என்ற அச்சம் எழ தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு இதே போல மாநில அளவிலான சட்டபேரவை தேர்தல்கள் நடைபெற்றது. அப்போது இரண்டாவது அலை தாக்குதலில் அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்தியதை யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. நாடே ஆக்சிஜன் தட்டுபாட்டில் விழிபிதுங்கி நின்றது குறிப்பிடத்தக்கது. மக்கள் தேர்தல் காரணமாகத்தான் அதிக அளவில் பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து என்று  ஒரு பேச்சும் எழுந்தது. இந்த நிலையில் தற்போது உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இதனால் மீண்டும் கடந்த ஆண்டை போல ஒரு அசம்பாவித்தை தவிர்க்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன் கூட்டியே ஊரடங்கை அமல்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட தொடங்கி விட்டனர். அதன் ஒரு பகுதியாக தற்போது மாநில அளவிலான ஊரடங்குகள் போடப்பட்டுள்ளது. இது பொங்கல் மற்றும் மகர சங்கராந்திக்கு பிறகு ஒன்று அல்லது இரண்டு வாரம் நாடு தழுவிய ஊரடங்காக இருக்குமா என்று பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

Comments