கொரோனாவுக்கு எதிரான பேராயுதம்..... தடுப்பூசி💉

இன்று உலகம் முழுவதும் சந்திக்கும் ஒரே பிரச்சினை கொரோனா என்னும் கொடிய தொற்றுநோய். இந்த அரக்கன் பலவிதமான இழப்புகளை ஏற்படுத்தி இருக்கிறான். பலருக்கு பொருளாதார இழப்பு, பலருக்கு இடு செய்ய இயலாது உயிர் இழப்பு, சிலருக்கு மனரீதியான பாதிப்பு என சொல்லி கொண்டே இருக்கலாம். இந்த அரக்கனை நம்மிடம் நெருங்கவிடாமல் இருக்க நாம் அவசியம் முககவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். 

இதைவிட மிகவும் முக்கியமானது தடுப்பூசி ‌போட்டுக் கொள்ளுதல். உலகில் கொரோனா தடுப்பூசியை பற்றி சில தவறான கருத்துகளை மக்களிடம் பரப்பி வருகின்றனர். தடுப்பூசி போட்டால் உயிர் இழக்க நேரிடும், மாரடைப்பு ஏற்படும் என்றும் அதிலும் மிகவும் முக்கியமானது தடுப்பூசி போட்டாலும் கொரோனா மீண்டும் வரும் போன்ற தவறான கருத்துகளை பரப்பி விடுகின்றனர். இது மிகவும் தவறு. இதை விட மிகவும் கொடுரமான தொற்று நோய்களை தடுப்பூசி என்று பேராயுதத்தால் தான் வென்றோம். உதராணமாக போலியோ என்னும் அரக்கன் எத்தனை குழந்தைகளின் வாழ்கையில் விளையாடி விட்டு சென்றான். அவனை இன்று இந்த உலகத்தில் இல்லாமல் செய்தது தடுப்பூசி மட்டும்தான். இரண்டாதாக அம்மை என்னும் கொடிய நோய் பல உயிர்கள் காவு வாங்கியது, இன்றும் அம்மை நோய் உள்ளது ஆனால் உயிர் இழப்பு என்பதை இல்லை, அதற்கு காரணம் தடுப்பூசி என்னும் பேராயுதம். அதுபோல் தான் இந்த கொரோனா தடுப்பூசியும் ஊசி போட்டாலும் கொரோனா வராது என்று யாராலும் உறுதியாக கூற முடியாது ஆனால் அதனால் உயிர் இழப்பை என்பது நிச்சயமாக குறைக்க முடியும். அதனால் நம்மையே நம்பி இருக்கும் நமது குழந்தைகளுக்காக, நமது பெற்றோர்களுக்காக, உங்களை நம்பி வாழும் ஒவ்வொரு உயிர்களையும் நினைவில் வைத்துக் கொண்டு நாம் கட்டாயம் கொரோனா தடுப்பூசி ‌போட்டுக் கொள்வோம். கொரோனா என்னும் பேரரக்கனை உலகத்தை விட்டே விரட்டுவோம்.

Comments