உழவுக்கு உயிரூட்டும் மாட்டுப்பொங்கல் திருநாள்!

இந்த 2025 ஆம் ஆண்டு மாட்டுப்பொங்கல் ஜனவரி மாதம் 15 தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ளது. தை மாதம் இரண்டாம் நாள் நமக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்து கால்நடைகளுக்கு நன்றி சொல்லி வழிபடுவோம் அதுவே மாட்டுப்பொங்கல் ஆகும்.

மாட்டுப்பொங்கல்

இந்த மாட்டுப்பொங்கலை ஒவ்வொருவரும் வேறு விதமாக கொண்டாடுவர். அதிலும் கிராமங்களில் மாட்டுப்பொங்கலை திருவிழா போல் கொண்டாடுவர். மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்து, அதன் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, கொம்புகளில் வண்ணமயமான பலூன்கள் அல்லது மணி கட்டி, கழுத்தில் பூ மாலை மற்றும் ‌ஆவாரம் பூ மாலை, வண்ணமயமான காகித மாலை போன்றவற்றை அணிவித்து மிகவும் சிறப்பாக அலங்காரம் செய்வார்கள். இப்படி அலங்கரித்து மாடுகளை கிராமத்தின் பொதுவான இடத்திற்கு அனைவரும் அழைத்து வந்து பொங்கல் வைத்து அதை மாடுகளுக்கு படையலிட்டு அதன் கால்களில் விழுந்து தனது விவசாயத்தில் எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்ததற்காக நன்றி சொல்லுவர்.

மாட்டுப்பொங்கல்

இளம் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் வண்ணமயமான உடைகள் அணிந்து மிகவும் உற்சாகமாக கொண்டாடுவர். சில கிராமங்களில் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவர். சில கிராமங்களில் வீடுகளிலேயே மாட்டிற்கு பொங்கல் வைத்து கொண்டாடுவர். இப்படி சிறப்பாக மாட்டுப்பொங்கலை கிராமங்களில் கொண்டாடி மகிழ்வர்.

Comments