28 நாள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இனி 30 நாட்கள் ஆக இருக்க வேண்டும் என்று TRAI அதிரடி உத்தரவு!
மொபைல் ஃபோன் சேவை வழங்கும் நிறுவனங்கள் prepaid recharge plan மாதாந்திர காலம் 28 நாட்கள் ஆக தற்போது உள்ளது. இதை இனி 30 நாட்கள் ஆக உயர்த்த வேண்டும் பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வந்தனர். இதனிடையே தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆன TRAI ஒரு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி இனி மாதாந்திர ரீசார்ஜ் இனி 28 நாட்களுக்கு பதில் 30 நாட்கள் ஆக உயர்த்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
மக்களின் அத்தியாவசிய சாதனமாக மாறி இருக்கிறது மொபைல் போன்கள்.
அத்தகைய செல் ஃபோன் ரீசார்ஜ் வேலிடிட்டியை பல்வேறு தொலைத்தொடர்பு
நிறுவனங்களும் மாதாந்திர அளவிலும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவிலும் வசூலிக்கின்றனர். இதில் மாதாந்திர ரீசார்ஜ் வேலிடிட்டி 28 நாட்கள் வைத்துள்ளனர் ஆனால்
இது பல்வேறு தரப்பு மக்களும் எதிர்த்து வருகின்றனர். இவ்வாறு ரீசார்ஜ்
செய்யும் பட்சத்தில் ஓராண்டுக்கு 13 முறை செய்ய வேண்டி இருக்கும். தற்போது (TRAI) எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இதை 30 நாட்கள்
ஆக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே கூடிய விரைவில் தொலைத்தொடர்பு
நிறுவனங்கள் இடமிருந்து நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment