பிப்ரவரி 1 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல அனுமதி

கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்து அதன்படி மக்கள் பொது இடங்களுக்கு சென்று வருவது மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் நிறைய தடைகள் விதிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே கோவிட் பரவல் குறைய தொடங்கிய நிலையில் மீண்டும் சில தளர்வுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இதனால் பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் மக்கள் கடற்கரைக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட  கடற்கரைகளுக்கு செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் கூட்டம் கூடுவது மற்றும் மாஸ்க் அணிவது உள்ளிட்ட விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments