தைப்பூசம் 2023: முருகன் வழிபாடு - Thaipusam 2023

தை மாதம் 5ஆம் நாள் இந்த ஆண்டு தைப்பூசம் விழா வருகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு பொதுவாக செவ்வாய் கிழமை உகந்த நாள் என்பது நாம் அறிந்ததே அதிலும் இந்த ஆண்டு தைப்பூசமும் செவ்வாய் கிழமையன்று வருவது இரட்டிப்பு சிறப்புகளை அள்ளி தரும். அன்றைய தினம் முருகப்பெருமானை வழிபட்டால் அவரது அருள் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தமிழகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருத்தணி, பழமுதிர்சோலை உள்ளிட்ட அறுபடை வீடுகள் மட்டுமின்றி பெரும்பாலான கோவில்கள் மூடபட்டு உள்ளதால் இந்த ஆண்டு தைப்பூசம் வீடுகளிலேயே மக்கள் கொண்டாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக காவடி எடுப்பது, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் பக்தர்கள் நிறைவேற்றுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி சந்தேகமே.

Comments