கோடைக்கால சரும பிரச்சனைகளுக்கு தீர்வு - Summer Skin Care Tips

கோடைகாலம் வந்தாலே அதிகம் பிரச்சனைகளை சந்திப்பது நமது சருமம் தான். வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நமது சருமத்தை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்ப்போம்.

தண்ணீர்:

முதலில் நாம் செய்ய வேண்டியது ஒரு நாளைக்கு 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும் தண்ணீர் நமது சருமத்திற்கு மட்டும் அல்லாமல், முழு உடலுக்கும் நன்மை தர கூடியது.உடல் வறட்சி, உடல் வெப்பம், உள் உறுப்புகள் செயல்பாடு என்று மொத்த உடலுக்கும் நன்மை அளிக்க கூடியது இந்த தண்ணீர். ஆகவே தினமும் 3 லிட்டருக்கு குறையாமல் தண்ணீர் அருந்த வேண்டும்.
 
பழங்கள்:
   
கோடைகாலத்தில் பழங்களை அதிகமாக நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் நீர் சத்து அதிகமான ஆரஞ்சு, எலுமிச்சை, கருப்பு திராட்சை, தர்பூசணி, நொங்கு, இளநீர் போன்ற பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.டீ,காபி போன்ற பானங்களை அருந்த வேண்டாம்.
 
காய்கறிகள்:
     
நல்ல பச்சையான நார் சத்து நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பூசணிக்காய், சுரைக்காய் போன்ற காய்களை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
 
சருமத்திற்கு:

முடிந்தவரை தினமும் இரண்டு முறை குளியுங்கள். குளித்து உடன் முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் கண்டிப்பாக போட வேண்டும். வெளியில் செல்லும் போது சன் ஸ்கிரீன் பயன்படுத்தவும். முடிந்த வரை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். தினமும் முகத்திற்கு சோற்றுக் கற்றாழை பயன்படுத்தலாம், இதனால் சருமம் வறண்டு போகாமல் மென்மையாக இருக்கும். பப்பாளி பழத்தை மசித்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி விடலாம்.
 
உணவு முறைகள்:
 
எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடவும். அசைவத்தில் கோழி கறி உண்ண வேண்டாம் அது மேலும் உடலை சூடாக்கும். ஆடு, மீன் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள். செயற்கை குளிர்பானங்கள், குளிர் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள். மேலேயுள்ள குறிப்புகளை நாம் பயன்படுத்தி வந்தாலை இந்த கோடைகாலத்தில்  நம் உடல், சருமம் இரண்டும் சிறப்பாக இருக்கும்.

Comments