கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?

மத்திய அரசின் பாலினத்தை முடிவு செய்தல் தடைச் சட்டத்தின்படி (1994), கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று சோதனை செய்து தெரிந்துகொள்வது, ஸ்கேன் மூலம் கண்டறிவது, ஸ்கேன் மையங்கள் அல்லது மருத்துவர் அதற்கு உதவுவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா

இன்றும் சிலர் தங்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.அவர்கள் தங்களுக்கு தெரிந்த வயதானவர்கள், சமூக ஊடகங்கள் , நண்பர்கள் என்று தங்களுக்கு தெரிந்த வகையில் சில குறிப்புகளை தெரிந்த கொண்டு அதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை இதுவாக இருக்கும் என்ற ஒரு முடிவுக்கு வருகின்றனர். அவற்றில் சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

1. முதலாவுதாக குழந்தையின் இதய துடிப்பு 160வதுக்கு மேல் இருந்தால் பெண் குழந்தை என்றும், 160வதுக்கு கீழ் இருந்தால் ஆண் குழந்தை என்றும்.

2. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாயின் நிறம் கருமையாக மாறினால் ஆண் குழந்தை என்றும், தாய் சற்று நிறம் கூடினால் பெண் குழந்தை என்றும்

3. தாய் கர்பமாக இருக்கும் போது வாந்தி எடுத்தல் பெண் குழந்தை என்றும், இல்லை என்றால் ஆண் குழந்தை என்றும்.

4. தாயின் வயிற்றின் அளவு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும், சிறிதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும்.

5. கர்பகாலத்தில் தாயின் முடி நன்றாக வளர்ந்தால் ஆண் குழந்தை என்றும், குறைவான அளவில் இருந்தால் பெண் குழந்தை என்றும் இவ்வாறு தங்களுக்கு தெரிந்த விஷயங்களை வைத்து கருவில் வளரும் குழந்தை ஆண் அல்லது பெண் என்று ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

இவை அனைத்தும் முற்றிலும் தவறானது கர்ப்பகாலத்தில் அவர்களது உடல்வாகு, எடுத்துக் கொள்ளும் மருந்துகள், உணவுகள், மனநிலை இவற்றை பொருத்தே இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றை‌ வைத்து கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிவது முற்றிலும் தவறான செயல்.


மிக முக்கிய குறிப்பு:
ஒரு குழந்தை தாயின் கருவில் வளரும் போது தாயின் அடிமனதில் குழந்தை ஆண் என்றும் பெண் என்றும் தோன்றும் அதுவே முற்றிலும் உண்மையானது.

Comments