குலதெய்வ வழிபாடும்...கோடி நன்மைகளும்!
குலதெய்வத்தை கும்பிட்டால் குறிக்கிடும் சங்கடங்கள் அனைத்தும் விலகும் என்று சொல்வார்கள். அத்தனை சக்திவாய்ந்தது குலதெய்வ வழிபாடு, ஒவ்வொருவரும் அவரவர் குலதெய்வம் என்ன என்பது நன்கு அறிந்திருப்பீர்கள். இல்லை என்றால் உங்கள் பூர்வீக ஊரில் உள்ள பெரியவர்களிடம் கேட்டால் நிச்சயமாக சொல்வார்கள்.
நமது குலதெய்வத்தை நாம் தினமும் வீட்டிலையை வணங்கலாம். குலதெய்வ கோயில் அருகில் உள்ளவர் மாதம் ஒருமுறை சென்று வரலாம்.
பணிநிமிர்த்தமாக வெளியூரில் இருப்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வக் கோயிலுக்கு சென்று வாருங்கள். அப்படி செல்லும் போது கடவுளுக்கு பொங்கல் வைத்து வழிபடுங்கள், உங்களால் முடிந்த அபிஷேக பொருட்களை வாங்கி சென்று அபிஷேகம் செய்யலாம். கோயில் திருபணிக்கு உங்களால் முடிந்த பணம் அல்லது பொருள் உதவி செய்யலாம். சிலருக்கு பெண் தெய்வம் குலதெய்வமாக இருக்கும், சிலருக்கு ஆண் தெய்வங்கள், இன்னும் சிலர் இறந்த முன்னோர்களை குலதெய்வமாக வழிபடுவர். பெண்தெய்வங்களை வழிபடும் போது மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுங்கள். ஒவ்வொரு ஊரிலும் வழிபாடு முறைகள் வேறுவேறு விதமாக இருக்கும், சிலர் பொங்கல் வைத்து வழிபடுவர், சிலர் ஆடு, கோழி காவு கொடுத்து வழிபடுவர், சிலர் காவடி எடுத்து வழிபடுவர்.
எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் போதும் முதலில் உங்கள் குழதெய்வ கோயிலுக்கு சென்று விட்டு தொடங்குங்கள், எல்லா செயலிலும் நம் குலதெய்வம் நம்முடன் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல் படுங்கள் நிச்சையமாக அந்த செயலில் நமக்கு வெற்றி கிட்டும்.
Comments
Post a Comment