நடிகை நயன்தாரா, விக்னேஷ்சிவன் திருமண புகைப்படம் வெளியானது!

கேரளாவில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் நாட்டில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில். அவர்களின் திருமணம் ஜீன் 9 மாமல்லபுரத்தில் ஒரு விடுதிகள் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. மிக முக்கிய பிரமுகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், கார்த்திக், அஜித் குடும்பம் என 200 பேர் கலந்துகொண்டனர். அவர்களது திருமண நிகழ்வை பிரபல ஒடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ வெளியிட உள்ளது. அதற்காக திருமண நிகழ்ச்சிக்கு வருவோர் செல்போன், கேமரா பயன்படுத்த தடை விதித்தது. எனினும் அவர்களது திருமண புகைப்படம் சில‌ சமுக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில் நயன்தாரா சிவப்பு நிற கைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட புடவை அணிந்துருந்தார் அதற்கு மரகதம், வைரம், வைடூரியம் என விலையுயர்ந்த நகைகளை அணிந்து தேவதை போல் இருந்தார். விக்னேஷ்சிவனும் பட்டு வேஷ்டி சட்டையில் மிகவும் அழகாக இருந்தார் அதில் சில புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.





Comments