ஆடி கிருத்திகை 2022: முருகன் வழிபாடு - Aadi Krithigai 2022
ஆடி கிருத்திகை (ஆடி 7ஆம் தேதி) ஜூலை 23, 2022 சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும் கிருத்திகை விரதம் மேற்கொள்ள படுகின்றன. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரமே ஆடி கிருத்திகை என கொண்டாடப்படுகிறது.
இந்த ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் இந்த ஆடி கிருத்திகை நட்சத்திரத்தில் தான் முருகன் அவதரித்தார், எனவே உலகம் முழுவதும் உள்ள முருகபெருமானின் கோயில்களில் இந்த ஆடி கிருத்திகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். நிறைய கோயில்களில் தேரோட்டமும், அன்னதானம் நடைபெறும்.
இந்த ஆடி கிருத்திகை நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வணங்கினால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கடந்த இரு ஆண்டுகளாக பெருந்தெற்று காரணமாக முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா கலையிழந்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு விமர்சயாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Om saravan bhava! aadi krithikai is going to celebrate on Saturday
ReplyDeletethank you for sharing aadi krithigai date and time
ReplyDeleteoom saravana bhava aadi krithigai is the prime festival for tamils
ReplyDelete