ஆடிப்பூரம் 2022: (திருவாடிப்பூரம்) Aadi Pooram Andal Jayanthi

ஆடி பூரம் (ஆடி 16ஆம் தேதி) ஆகஸ்ட் 1, 2022ல் திங்கள் கிழமை நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த திருவாடிப்பூரம் விழாவானது கொண்டாடப்படுகிறது.

அம்மன் பிறந் தினமே ஆடி பூரமாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூர விரதம் இருந்தால் பிரிந்தவர்கள் கூடுவார்கள். பகைவர்களும் நண்பர்கள் ஆவார்கள். இந்த ஆடி பூரம் சக்தி ஆலயங்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகிறது. இந்த ஆடி பூரம் விரதத்தை திருமணமான பெண்கள் தங்கள் கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும், திருமணம் ஆகாது பெண்கள் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கவும் மேற்கொள்கின்றனர். 

அம்மனுக்கு சாத்தபட்ட வளையல்களை பெண்கள் தங்கள் கைகளில் அணிந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூரம் தினமான அன்றைய தினம் அம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ள  பெண்கள் தங்களின் வீடுகளில் பூஜை அறையில் உள்ள அம்மன் படத்திற்கு முன்பு பட்டு வஸ்திரம், வளையல் பூக்கள் படைத்து வணங்கலாம். இளம்பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் கொடுத்தால் நம்முடைய வீட்டிலும் வளைகாப்பு நடைபெறும் என்பது நம்பிக்கையாகும்.

Comments