ஆடி தள்ளுபடி 2023: ஆடி தள்ளுபடியா.. போலி தள்ளுபடியா ?? - Aadi Sale 2023
ஆடி மாதம் என்றாலே நமக்கு நினைவில் வருவது இரண்டு விசயங்கள் ஒன்று அம்மன் வழிபாடு, மற்றொன்று ஆடி தள்ளுபடி (Aadi Thallupadi). அப்படி என்னதான் இருக்கு இந்த ஆடி தள்ளுபடியில், இது உண்மையான தள்ளுபடியா, அல்லது ஏமாற்ற வேலையை என்று பார்ப்போம்.
உண்மையில் ஆடி தள்ளுபடி என்பது ஒரு வியாபார தந்திரம்.
மக்களை ஏமாற்றும் வேலை, அப்படி ஒரு தள்ளுபடியே இல்லை. நீங்கள் ஒரு புடவை எடுத்தீங்கள் என்றால் அதில் 50% தள்ளுபடி என்று சொல்வார்கள், உண்மையில் அப்படி தள்ளுபடி செய்து கிடைக்கும் கடைசி விலைதான் அந்த புடவையின் உண்மையான விலை ஆகும். இன்னொரு தந்திரம் ஒரு புடவை எடுத்தால் இன்னொன்று இலவசம் அல்லது இரண்டு இலவசம் என்று கூறுவது. நமது மக்கள் இலவசம் என்றாலே என்ன ஏது என்று விசாரிக்காமல் உடனே சென்று வாங்கி விடுவார்கள். அவ்வாறு இலவசம் கொடுத்தால் கடைக்காரருக்கு எப்படி கல்லா கட்டும் என்று நினைத்து பார்க்க மாட்டார்கள்.
அந்த ஒரு புடவையிலையே அவர்கள் இரண்டு புடவைக்கு உள்ள பணத்தை பறித்து விடுவார்கள். இந்த ஆடி தள்ளுபடி என்பது உண்மையில் தங்களிடம் உள்ள பழைய சரக்குகள் விற்கும் தந்திரம் ஆகும். நீங்கள் வேண்டும் என்றால் ஆடிக்கு முன் ஒரு புடவையும், அதே புடவையே ஆடி தள்ளுபடியிலும் எடுத்து பாருங்கள் இரண்டும் ஒரே விலைதான் வரும். ஆடி தள்ளுபடி என்பது முழுக்க முழுக்க ஏமாற்ற வேலையை, எனவே மக்களே ஏமாந்து விடாதீர்கள்.... இந்த வருடமும்!
ஆடி மாதம் வந்தாலே அத்தனை துணிக்கடை மற்றும் நகைக்கடைகள் இந்த ஆடி தள்ளுபடி பெயர்ரை சொல்லிதான் ஓடுது
ReplyDelete