பாக்கியாவிடம் சிக்கி சின்னா பின்னமான கோபி!

விஜய் டிவி பாக்கியலட்சுமி தொடர் ஒவ்வொரு நாளும் அதிரடி சரவெடியாக திருப்பங்களுடனும் இருந்த நிலையில் இன்று பெரிய அணு குண்டு வெடித்தது, கோபிக்கு இன்று ஆப்பு வைப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய கடப்பாரையை கொண்டு மகன், மனைவி, அப்பா என அனைவராலும் மாறி மாறி தாக்கப்பட்டார்இவ்வளவு நாளாக மனைவி பாக்கியாவை ஏமாற்றி வந்த பலே திருடன் கோபி இப்போது கையும் களவுமாக பிடிபட்டு போனார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கோபி ராதிகாவிடம் நெருக்கமாக பேசி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு வந்த பாக்கியலட்சுமி மனவருத்தில் இருந்த நிலையில். மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பிய கோபியை வீட்டிற்கு உள்ளேயே அனுமதிக்காமல் பல கேள்விகளை ஏழுப்பி வாசலிலேயே வைத்து கிழித்து தொடங்கிவிட்டார் கதையின் நாயகி பாக்கியலட்சுமி. போதா குறைக்கு மகனும் சேர்ந்து கொண்டு தன் தந்தையின் மீது இருந்த கோபத்தை வெளிக்காட்டினார்.

Comments

Post a Comment