கர்ப்பகாலதில் உடலுறவால் கருச்சிதைவு ஏற்படுமா..?

ஒரு பெண் முதல் முறையாக கர்ப்பம் தரித்து உடன் அவளுக்கு பல விதமான சந்தேகங்கள் மனதில் தோன்றும். அதில் சிலவற்றை உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள், சிலவற்றை யாரிடமும் கேட்க‌ தயங்குவார்கள். அப்படி ஒன்று தான் இந்த கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளலாமா வேண்டாமா என்ற கேள்வி.

நிச்சயமாக எந்த வித தயக்கம் இன்றி உங்கள் கணவனுடன் நீங்கள் உடலுறவு கொள்ளலாம், உங்களுக்கு ஏதேனும் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினை அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் உடலுறவு கொள்ளலாம். மற்றபடி கர்ப்பகாலத்தில் உடலுறவு கொண்டால் எந்த வித பிரச்சினையும் வராது. மேலும் இவ்வாறு உடலுறவு கொள்வதனால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்விற்கள் அது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் நல்லது. 

குழந்தைக்கும் அது நிறைய பலன்களை கொடுக்கும். ஆனால் மிகவும் கவனமாக, நிதானமாக, பெண்ணின் வயிற்று பகுதியில் மிகவும் பாரம் கொடுக்காமல் மேற்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் நீங்கள் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் வரை உடலுறவு கொள்ளலாம், இவ்வாறு செய்வதனால் சுகப்பிரசவம் ஆகுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆகையால் பெண்களை எந்த வித தயக்கம் இன்றி  உங்கள் கணவனுடன் இணைந்து  இந்த கர்ப்பகாலத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

Comments