மகாளய அமாவாசை 2022: பித்ரு தர்ப்பணம் - Mahalaya Amavasai 2022

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசை ஆகும். அதன்படி இந்த வருடம் புரட்டாசி 8ம் தேதி (25-09-2022) ஞாயிறு அதிகாலை 4.05 முதல் மறுநாள் (26-09-2022) திங்கள் அதிகாலை 4.21வரை மகாளய அமாவாசை ஆகும். மகாளய அமாவாசைக்கு முந்தைய பதினைந்து நாட்கள், அதாவது பௌர்ணமிக்கு அடுத்து நாளிலிருந்து தொடங்கி மகாளய அமாவாசை வரை மகாளய பட்சம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய பட்சம் ஆரம்பம் செப்டம்பர் 10ம் தேதி முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை, மகாளய பட்ச காலமாகும்.

மகாளய அமாவாசை

பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. இந்த நாளில் புனித நீர்நிலைகளுக்கு  சென்று நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக தர்பணம் கொடுப்பது மிகவும் நல்லது. வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்த உணவினை சமைத்து, முன்னோர்களுக்கு படைத்து, பின் காகத்திற்கு உணவு வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.

Comments