ஆக்‌ஷன் ஹீரோ சரவணன் நடிக்கும் தி லெஜெண்ட் திரைப்படம் - The Legend Movie

ஆக்‌ஷன் ஹீரோ லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட் திரைப்படம் உலகெங்கும் ஜூலை 28 வியாழகிழமை அன்று ஐந்து மொழிகளில் 2500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
 
தி லெஜண்ட் சரவணன் அருள்
இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' ஆகிய பாடல்கள் பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் சமூக வலைதளங்களில் சக்கை போடு போட்டு இருக்கிறது. முதல் படம் வெளிவருவதற்கு முன்பே தான் ஒரு அல்ட்ரா லெஜண்ட் (Ultra Legend) என அழுத்தமாக நிருபித்து காட்டி இருக்கிறார் லெஜண்ட் சரவணன்.
 
தமிழகம் எங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழகத்தை போல மற்ற மொழிகளிலும் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. குறிப்பாக உலகமெங்கும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Comments