அதிமுகவின் புதிய ஒற்றை தலைமைக்கு மரண அடி கொடுத்த கோர்ட்!
அதிமுகவில் அதிரடி ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சமே கிடையாது. அதிலும் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதிமுகவில் கடந்த மாதம் நடந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி உருவாக்க பட்டு அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அமர வைக்கப்பட்டார். அத்தோடு நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது. இதில் சென்னை உயர்நீதிமன்றம்
இன்று வழங்கிய தீர்ப்பில் ஜூலை 11 நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும்
ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர் வேண்டும் என்று சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு பட்டாசு வெடித்து
கொண்டாடினர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இது
பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment