Amazon Pay: அமேசான் பே-யும் அயோக்கியத்தனமும் - எச்சரிக்கை!
அமேசான் பே மூலம் ரீசார்ஜ் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் நம்மில் பலர். எளிதாக ரீசார்ஜ் செய்யலாம் நிமிடத்தில் மொபைல் எண்ணின் அக்கவுண்ட்டில் ரீசார்ஜ் செய்த தொகை வரவு வைக்கப்படும் இப்படியான பொது அபிப்பிராயம் நமக்கு உண்டு. ஆனால் சமீபத்தில் அமேசான் பே மூலம் செய்யப்பட்ட ரீசார்ஜுல் நடந்த ஒரு கசப்பான அனுபவத்தை உங்களுக்கு கூறுகிறேன். குறிப்பாக ஏர்டெல் அல்லது ஜியோ, வோடபோன் ஆப்கள் மூலமாக ரீசார்ஜ் செய்யும் போது பேமெண்ட் கேட்வேயாக (Third party payment) அமேசானை தேர்வு செய்பவர் அதிகம். அவர்கள் கேஷ் பேக் மற்றும் அமேசான் மீது உள்ள நம்பிக்கை போன்ற சில காரணங்களால் இதை செய்கின்றனர். ஆனால் இதற்கு கைமாறாக அமேசான் நமக்கு ஒரு சம்பவத்தை செய்கிறது அது என்ன என்பதை கீழே பார்ப்போம்.
சமீபத்தில் நம் நண்பர் ஒருவர்க்கும் நடந்த நிகழ்வை இங்கு சொல்கிறோம். ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய ஏர்டெல் ஆப் மூலம் பிளான் செலக்ட் செய்து அமேசான் பேமெண்ட் கேட்வேவை தேர்ந்தெடுத்தோம். ரீசார்ஜ் ஆனது என்று அமேசான் பே-யில் காட்டியது, அதோடு கேஷ் பேக் தொகையும் வந்தது. ஆனால் ரீசார் ஆகவில்லை ஏர்டெல் இடம் கேட்டால் ரீசார்ஜ் தொகை உங்கள் அக்கவுண்ட்டில் வரவில்லை என்கிறார்கள். ஏர்டெல் ஆப் மூலம் பரிவர்த்தனை ஆனதற்கான எந்த சான்றும் இல்லை. சரி அமேசான் பேயிடம் கேட்டால் உங்கள் பணம் ஏர்டெல் அக்கவுண்ட்டில் கிரேடிட் செய்யபட்டு விட்டது என்று கூறுகிறார்கள். மொத்தத்தில் என் பணம் 719 ரூபாய் சுவாகா என்று மன வருத்தோடு கூறி சென்றார். பிரச்சனை தீர்க்க அவர்கள் எந்தவிதத்திலும் முயற்சிக்கவில்லை. அவர்களுக்கு டிக்கெட் குளோஸ் (புகாரை முடிந்ததாக காட்டுதல்) செய்வதில் மட்டுமே கூறியாக உள்ளனர்.
தயவுசெய்து எந்த மொபைல் நிறுவன சேவையை பயண்படுத்துகிற்களோ அந்த மொபைல் நிறுவனத்தின் ஆப்களையோ அல்லது வெப்சைட்டிலோ ரீசார்ஜ் செய்வது சிறந்தது. பேண்ட் ஆப்களின் கேஷ் பேக்கிற்க்கு ஆசைபட்டு மொத்தமாக கொடுத்து விட்டு புலம்பி பயணில்லை. உங்களுக்கு இது போன்ற அனுபவம் நடந்திருக்கா என்று கமெண்டில் சொல்லுங்கள்.
Comments
Post a Comment