ஆவணி ஞாயிறு விரதம் அருள் மழை பொழியும் முத்துமாரியம்மன்
ஆவணி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை தரிசிப்பது மிகவும் சிறப்பான விசயம். அதிலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது நமக்கு அந்த அன்னையின் அருள் கடலில் குளிப்பதற்கு சமம்.
இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலான மாரியம்மன் கோவில்களில் விழாக்கோலம் பூண்டு இருக்கும். அங்கு பக்தர்கள் மொட்டை அடித்தல் மற்றும் மாவிளக்கு ஏந்தி சிறப்பு வழிபாடுதங்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். ஆவணி ஞாயிற்றுகிழமைகள் 2022ல் ஆகஸ்ட் 21, 28ம் தேதிகள் மற்றும் செப்டம்பர் 4, 11ம் தேதியில் வருகிறது. இந்த நாட்களில் அம்பாளை வேண்டி இறை அருள் பெறுவோம்.
Comments
Post a Comment