பிக் புல் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா உடல் நல குறைவால் காலமானார்!!

இந்தியாவின் பிக் புல் என்று அழைக்கப்படும் பங்குசந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா உடல் நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 62 ஆகும். இந்திய பங்குச் சந்தையின் பிதாமகன் என்று அழைக்கப்படுபவர். இவர் பங்குசந்தை முதலீட்டாளர் மட்டுமின்றி சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகவும் இருந்து வந்தார். இவரது சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இவர் கடந்த சில நாட்களாக கிட்னி பிரச்சனையால் அவதி பட்டு வந்தார் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் இன்று காலை உயிர் இழந்தார்.

Comments