இந்தியா vs பாகிஸ்தான்: பாகிஸ்தானை பழிதீர்க்குமா இந்தியா? - ஆசிய கோப்பை 2022
பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். அதிலும் ஆசிய கோப்பை போன்ற ஒரு சர்வதேச போட்டிகளில் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை கிரிக்கெட்டையே பார்க்காதவர்கள் கூட ரசித்து பார்ப்பார்கள். சர்வதேச அளவில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு. காரணம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவு அப்படிப்பட்டது.
கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு உலககோப்பை போட்டிகளிலும் இதுவரை இந்திய அணி பாகிஸ்தானிடம் தோற்றதே இல்லை என்ற சாதனையையும் முறியடித்தது பாகிஸ்தான்.
இதனால் (28-8-2022) ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரப்படி 7:30 மணிக்கு துபாயில் நடைபெறவுள்ள இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய தோல்விக்கு இந்திய அணி தக்க பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்த்து உள்ளனர் இந்திய ரசிகர்கள். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் இணையத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகும்.
Comments
Post a Comment