ஹயக்ரீவர் ஜெயந்தி 2022: கல்வி கடவுள் - Hayagrivar Jayanti 2022
தமிழ் தேதிப்படி இந்த வருடம் ஆடி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் ஆடி மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது.
மனித உடலும், குதிரை முகமும் கொண்டவர். இவர் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். எனினும் இந்த அவதாரத்தினை தசாவதாரத்திற்குள் சேர்ப்பதில்லை. இவரிடம் குழந்தைகளின் கல்விக்காக வேண்டுவது மிகவும் சிறப்பு. இவர் வேதங்களின் தெய்வமாக கருதுகின்றனர். எனவேதான் இவரை கல்வி கடவுளாக போற்றுகின்றனர். ஹயக்ரீவர் ஜெயந்தியன்று நம் வீட்டில் உள்ள குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் இருக்கும் ஆலயங்கள் சென்று தரிசித்து விட்டு வாருங்கள். இல்லையெனில் வீட்டிலேயே ஹயக்ரீவர் படத்தை வைத்து வணங்கினால் நிச்சயம் நன்மை கிடைக்கும்.
Comments
Post a Comment