கிருஷ்ண ஜெயந்தி 2022 - Janmashtami - Krishna Jayanthi 2022
ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி 2022ல் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, (ஆவணி 3ஆம் நாள்) வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு:
கிருஷ்ணன்
பிறந்த தினமே கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. மதுராவில்
வசுதேவர் - தேவகிக்கு எட்டாவது மகனாக கிருஷ்ணன் பிறந்தார் ஆனால் அரக்கனான
அவரது தாய்மாமன் கம்சனிடம் இருந்து கிருஷ்ணனை காக்க கோகுலத்தில் நந்தகோபன்- யசோதை தம்பதியினர் அவரை வளர்த்தனர். சிறு வயதில் கிருஷ்ண மிகவும்
குறும்பு செய்பவராகவும், வெண்ணெய் திருடி உண்பவராகவும், வளர்ந்த உடன்
கோபியருடன் கொஞ்சி விளையாடுபவராகவும் என்னற்ற லீலைகள் செய்து கோகுலத்து
மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். பின் மதுரா சென்று அங்கே கொடுங்கோல் ஆட்சி செய்த கம்சனை கொன்று மக்களை காப்பாற்றினார்.
அதனால் கிருஷ்ணன் பிறந்த தினத்தை மக்கள் மிகவும் சிறப்பாக தங்கள் வீட்டில் கிருஷ்ணனுக்கு பிடித்த அவல், முறுக்கு, வெண்ணெய் போன்ற பலகாரங்கள் வைத்து வாசல் படியில் இருந்து பூஜை அறை வரை கிருஷ்ணன் பாதம் இட்டு வழிபடுவர். இன்னும் சிலர் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடம் அணிந்து மகிழ்வர். சிலர் உறியடி நிகழ்ச்சி நடுத்துவார்கள். அனைத்து வைணவத் தலங்களில் அன்று சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெறும்.
Comments
Post a Comment