உங்கள் வீட்டில் தேசிய கொடி ஏற்றிவிட்டிற்களா?

நம் நாட்டின் 75வது சுதந்திர தினம் வரவிருப்பதை ஒட்டி மத்திய அரசு 'ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி' என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.

இந்திய தேசியக் கொடி

இந்த திட்டத்தின் படி ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடியை பறக்க விடவேண்டும் என்று நம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தி உள்ளார். இதனால் இந்த 75வது சுதந்திர தினம் மேலும் புத்துயிர் பெறும் என்றும் மக்களுக்கு தேசபக்தியை மேலும் அதிகரிக்கும் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி

பிரதமரின் இந்த கோரிக்கையைடுத்து நேற்று 13ஆம் தேதி முதல் பல்வேறு பிரபலங்களும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவர்ண கொடியை ஏற்றி வையுங்கள். இதனிடையே தேசிய கொடியை பறக்க விட எந்தவிதமான நேர வரைமுறை இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.

Comments