விநாயகர் சதுர்த்தி 2022: கணேஷ் சதுர்த்தி பூஜை - Vinayagar Chathurthi 2022
ஈசனின் மகனாக முழு முதல் கடவுளான விநாயகரை ஆவணி மாதத்தில் வரும் வளர் பிறை சதுர்த்தியில் வணங்குவதே விநாயகர் சதுர்த்தி. அதன்படி இந்த வருடம் ஆவணி மாதம் 12ஆம் தேதி, ஆகஸ்ட் 31,2022, புதன் கிழமை வருகிறது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி
சிறப்பாக கொண்டாடபடுகின்றன. அதிலும் வட இந்தியாவில் மிகவும் சிறப்பு வாய்ந்த
விழாவாக கொண்டாடப்படுகிறது. வீட்டில் பிள்ளையார் வைத்து அதற்கு சிறப்பு
பூஜைகள் அபிஷேகங்கள் செய்து, விநாயகருக்கு பிடித்த மோதகம், சுண்டல் செய்து
வீடுதோறும் அலங்காரங்கள் செய்து மிகவும் சிறப்பாக விநாயகரை
வழிபடுகின்றனர்.
பின்னர் விநாயகரை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். அதுமட்டுமின்றி தெருக்களிலும் பெரிய விநாயகர் சிலை வைத்து சிறப்பாக வழிபடுகின்றனர் பின்னர் சிலையை மேலதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு மக்கள் அனைவரும் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக வழிபட்டு விநாயகரின் அனைத்து ஆசிகளையும் பெறுகின்றனர்.
Comments
Post a Comment