டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்தார்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி இன்று அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது அவருடைய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சைரஸ் மிஸ்த்ரி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளனர். இவருக்கு வயது 54.
இவர் டாடா குழுமத்தின் 6வது தலைவராக கடந்த 2012ல் இருந்து 2016 வரை பொறுப்பு வகித்தார். இவர் தலைவராக இருந்த காலத்தில் டாடா குழுமம் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment