தமிழ்நாட்டில் எல்லா வீட்டிலும் இந்த மாதம் முதல் கரண்ட் பில் ஷாக் அடிக்கும்!

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு
மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்த நிலையில் கட்டண உயர்வு இன்று முதலே அமலுக்கு வருகிறது. இந்த புதிய மின் கட்டணம் 2026-27 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
*100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு முதலியவற்றுக்கு வழங்கப்படும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். அதேபோல் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான மானியத்தை நுகர்வோர் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

மின்கட்டண உயர்வு விவரம்:
  • 2 மாதங்களுக்கு 101-200 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.27.50 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.72.50 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 400 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.147.50 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.297.50 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 600 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.155 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 700 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.275 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.395 உயர்த்தப்படுகிறது.
  • 2 மாதங்களுக்கு 900 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதத்திற்கு ரூ.565 உயர்த்தப்படுகிறது.

Comments