Karthigai 1 2022 Tamil Calendar - கார்த்திகை மாதம் 1ம் தேதி

கார்த்திகை மாதம் என்றாலே நமது நினைவுக்கு வருவது மூன்று விஷயங்கள். கார்த்திகை மாதம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது இது ஒரு கார்காலம், கருமேகங்கள் சூழ மழை அதிக அளவு தரும் மாதம் இந்த கார்த்திகை மாதம். இரண்டாவது திருக்கார்த்திகை தீபம், கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் இந்த திருக்கார்த்திகை தீபம் கொண்டப்படுகிறது. சிவபெருமான் அவதரித்த நாளாகும், முருகன் அவதாரம் எடுத்து நாளாகும் இந்த திருக்கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படும். அனைத்து சிவாலயங்களிலும் மற்றும் முருகன் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் செய்து தீபம் ஏற்றப்படும். மக்கள் வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றி கடவுளை வணங்குவர்.

கார்த்திகை 1

மூன்றாவதாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து யாத்திரை செல்லுதல். கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மாலையிட்டு 41 நாட்கள் விரதம் இருப்பார்கள் அப்படி இந்த 2020ம் ஆண்டில் கார்த்திகை 1ம் தேதி வியாழக்கிழமை வருகிறது. ஆங்கில தேதி படி நவம்பர் மாதம் 17ம்தேதி வருகிறது.

கார்த்திகை 1ம் தேதி வியாழக்கிழமை நல்ல நேரம்:

காலை நல்ல நேரம் 10:45 முதல் 11:45 வரை.

கௌரி நல்ல நேரம் காலை: 12:15 முதல் 1:15 & மாலை: 6:30 முதல் 7 :30 வரை.

இராகு காலம்: 1:30 முதல் 3:00 வரை.

எமகண்டம்: 6 முதல் 7:30 வரை.

கார்த்திகை மாதம் 1ம் தேதியன்று மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள் சிலர் மகரஜோதி வரை மாலை அணிந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த கார்த்திகை மாதம் முழுவதும் திரும்பும் பக்கம் எல்லாம் ஜவ்வாதும், சந்தனமும் மணக்கும். சிவன், முருகன், ஐயப்பன் என்று முக்கியமான தெய்வங்களை வணங்கும் கார்த்திகை மாதம் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்ந மாதத்தில் நிறைய திருமணங்கள், புதுமனை புகுவிழா போன்ற சுபகாரியங்கள் நடத்தப்படுகிறது.

Comments