Muthalamaichar Kalaignar Kapitu Thittam: முதலமைச்சரின் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்!!!
தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன் என்ன? காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன? இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறமுடியும். இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.20 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். சிகிச்சைகள் விவரங்கள் : பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைகள், அதிலும் குறிப்பாக குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதய, நரம்பு, சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவற்றை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் கட்டணமில்லா மருத்துவமாக இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை பெறலாம். ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சிகிச்சைகள் பெறலாம். (சிகிச்சைகளுக்கான மருத்துவ பட்டியல் CMCHISTN வலைத்தளத்தில் விவரமாக உள்ளது) சிகிச்சை பெற தகுதி: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும...